நித்தியானந்தாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரமத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நித்தியானந்தா மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாகவும், விசாரணைக்கு ஆஜராவதில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விலக்கு தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கர்நாடக அரசும் நித்தியானந்தா தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.