​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து 10 வரிகள் பேச முடியுமா? ராகுலுக்கு ஜே.பி.நட்டா கேள்வி

Published : Jan 24, 2020 6:52 PM

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து 10 வரிகள் பேச முடியுமா? ராகுலுக்கு ஜே.பி.நட்டா கேள்வி

Jan 24, 2020 6:52 PM

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ராகுல்காந்தி தொடர்ந்து பத்து வரிகள் பேசிவிட்டால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கான ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார். இந்த சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் கட்சி அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்ற அவர், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து 10 வரிகள் பேச வேண்டும் என்றார். அப்படி ராகுல்காந்தி பேசிவிட்டால் அவர் சொல்வதை பாஜ.க ஏற்றுக்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.