​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக 27-ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

Published : Jan 24, 2020 6:42 PM

திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக 27-ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

Jan 24, 2020 6:42 PM

திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துகாக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உப வடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

image

அதனை ஏற்று வரும் 27-ஆம் தேதி முதல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 521 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று கூறியுள்ளார்.

image

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவும் கேட்டுக்கொண்டுள்ளார்.