​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிதி பற்றாக்குறையால் தவிக்கும் மாநிலத்தில் மேல் சபை தேவையா? கலைக்க ஜெகன்மோகன் முடிவு

Published : Jan 24, 2020 6:30 PM

நிதி பற்றாக்குறையால் தவிக்கும் மாநிலத்தில் மேல் சபை தேவையா? கலைக்க ஜெகன்மோகன் முடிவு

Jan 24, 2020 6:30 PM

ஆந்திராவில் மேல்-சபையை கலைக்க அந்த மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் ஆந்திர சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பேசுகையில், மூன்று தலைநகர் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி மேல்-சபைக்கு அனுப்பப்பட்டது என்றார். ஆனால் அந்த மசோதாக்களை மேல்-சபை தலைவர் அரீப் நிபந்தனைகளை மீறி தேர்வு கமிட்டியின் பரீசிலைனைக்கு பரிந்துரை செய்துள்ளதாக அவர் கூறினார்.

மேல்-சபைக்காக ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக கூறிய அவர், நாட்டில் 6 மாநிலங்களில் மட்டுமே சட்டமேல்-சபை உள்ளது என்றார். ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் தவிக்கும் மாநிலத்தில் இந்த சட்ட மேல்-சபை தேவையா? இல்லையா? என்பது குறித்து விவாதம் செய்ய வருகிற 27-ந் தேதி சட்டசபை சிறப்பு கூட்ட தொடர் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.