​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு - பட்னாவிஸ் மறுப்பு

Published : Jan 24, 2020 6:20 PM

செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு - பட்னாவிஸ் மறுப்பு

Jan 24, 2020 6:20 PM

மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டு கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், தான் முதலமைச்சராக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போனை ஒட்டுகேட்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்று கூறினார். எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டுகேட்பது மகாராஷ்டிராவின் கலாச்சாரம் அல்ல என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக எந்த விதமான ஏஜென்சிகள் வாயிலாகவும் அரசு விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்ட அவர், அரசு உடனடியாக விசாரணை நடத்தி மக்கள் முன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.