​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீர, தீர விருது பெற்ற சிறுவர், சிறுமியருக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published : Jan 24, 2020 6:10 PM

வீர, தீர விருது பெற்ற சிறுவர், சிறுமியருக்கு பிரதமர் மோடி பாராட்டு

Jan 24, 2020 6:10 PM

வீரதீரச்செயல் விருது பெற்ற சிறுவர் மற்றும் சிறுமியருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

வீர,தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பால சக்தி புரஸ்கர் விருது வழங்கினார். அந்த விருது பெற்றவர்களை நேரில் அழைத்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சிறிய வயதிலேயே செயற்கரிய செயல்களை நிகழ்த்திய சிறுவர், சிறுமிகளை பார்த்து வியப்படைவதாக கூறினார்.

இந்த சாதனைகள்,  எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த  உத்வேகமூட்டுவதாக இருக்கும் என்று அவர் கூறினார். கடினமான சூழல்களில் சிறுவர், சிறுமிகள் தங்கள் வீரத்தைக் காட்டியுள்ளதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.