​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
SSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..!

Published : Jan 24, 2020 1:51 PM

SSI வில்சனைக் கொல்லப் பயன்டுத்திய கத்தி மீட்பு..!

Jan 24, 2020 1:51 PM

எஸ்.ஐ. வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி திருவனந்தபுரம் அருகே கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை விற்றது யார் என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

image

அவர்கள் அளித்த தகவலின் பேரில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை நேற்று தமிழக போலீசார் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கழிவு நீர் ஓடையில் இருந்து கேரள போலீசாரின் உதவியுடன் மீட்டனர். அந்த துப்பாக்கியில் மேட் இன் இத்தாலி என உள்ளதகவும், ஒன்லி ஃபார் ஆர்மி சப்ளை என உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே வில்சன் கொலை, தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு விற்றது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் தமிழகம் மட்டுமன்றி பெங்களூருவிலும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த இருவரால் விற்பனை செய்யப்பட்டதாகவும் மேலும் சிலரும் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் பெங்களூர் க்யூ பிரிவு போலீசார் பெரியமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

image

கொலையாளிகளிடம் போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் வில்சனை கொல்லப் பயன்படுத்திய கத்தியும் திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்டுள்ளது. கத்தியை திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் பேருந்து நிலையத்தில் வீசியதாக, கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களை அங்கு அழைத்து சென்ற போலீசார் கத்தியை பேருந்து நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டமில்லாத புதர்மண்டிய இடத்தில் இருந்து மீட்டனர். இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தில் கத்தியை வாங்கியதாக அவர்கள் தெரிவித்த கடைக்கும், அவர்கள் தங்கியிருந்து திட்டம் தீட்டியதாக கூறப்படும் நெய்யாற்றங்கரை பகுதியில் உள்ள வாடகை வீட்டுக்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கொலை நடந்த இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். 

இதனிடையே, போலீஸ் அதிகாரி வில்சனை சுட்டுக்கொல்ல பயங்கரவாதிகள் சென்னையில் துப்பாக்கி வாங்கியது தெரிய வந்ததையடுத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வில்சனை சுட பயன்படுத்திய துப்பாக்கியை சென்னை பெரியமேட்டில் வாங்கியதாக இருவரும் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக பெரியமேடு பகுதியில் பெங்களூர் கியூ பிரிவு போலீசாரும், தமிழக போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த சென்னையை சேர்ந்த நபர் யார் என்பது பற்றிய தகவல் கிடைத்திருப்பதாகவும், அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.