​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுமியை கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

Published : Jan 24, 2020 11:50 AM

சிறுமியை கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

Jan 24, 2020 11:50 AM

தெலுங்கானாவில் தம்மை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போதை ஆசாமிகளிடமிருந்து தப்பிய 16 வயது சிறுமியை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் நகராட்சிக்குட்பட்ட வாணி நகரில் வீடு ஒன்றில் வேலை செய்து வந்த அந்தச் சிறுமியை மர்ம நபர்கள் 3 பேர் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள வனப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

குடிபோதையில் இருந்த மர்ம நபர்களிடமிருந்து தப்பிய சிறுமி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே, அதன் தொடர்ச்சியாக போலீசார் சென்று ஆடைகள் கிழிந்த நிலையில், காயங்களுடன் அவரை மீட்டனர். சிறுமி தெரிவித்த அடையாளங்களின்படி இளைஞன் ஒருவனைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.