​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

Published : Jan 24, 2020 11:49 AM



தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

Jan 24, 2020 11:49 AM

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ரஜினி மீது சென்னை, கோவை காவல்நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.

மனுக்களை விசாரித்த நீதிபதி, புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என கேள்வி எழுப்பினார். காவல்துறைக்கு உரிய அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்று கூறிய நீதிபதி, மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதே தவறு என்று தெரிவித்தார்.

image

 தந்தை பெரியார் சிறந்த தலைவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என்று தெரிவித்த நீதிபதி, எனினும், விதிகளை மீறி வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது என்று கூறினார்.