​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடமாநிலங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர வாய்ப்பு -IMD

Published : Jan 24, 2020 10:09 AM

வடமாநிலங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர வாய்ப்பு -IMD

Jan 24, 2020 10:09 AM

மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால், ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் குளிரும் மழையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஏழு டிகிரி செல்சியசுக்கு வெப்ப நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள் குளிருக்கு ஒடுங்கியுள்ளனர். குளிர்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் லாஹூல் ஸ்பிட்டி மலைப்பகுதியில் பனி கொட்டிக் கிடக்கிறது. பல்வேறு சாலைகளை, உறைபனி சூழ்ந்திருப்பதால் அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.