​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் மீதான நிதிக் கட்டுப்பாடுகளை நீக்க சீனா ஆதரவு

Published : Jan 24, 2020 9:04 AM

பாகிஸ்தான் மீதான நிதிக் கட்டுப்பாடுகளை நீக்க சீனா ஆதரவு

Jan 24, 2020 9:04 AM

பாகிஸ்தான் அரசு தீவிரவாதம் மீது நடவடிக்கை எடுத்து வருவதால் அதன் மீதான சர்வதேச நிதிக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்சில் இயங்கும் FATF எனப்படும் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக கண்டித்து அதனை சாம்பல் நிறப் பட்டியலில் வைத்துள்ளது.

image

தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டு அதனை நிறைவேற்ற தவறினால் உலக நாடுகளிடமிருந்து நிதியுதவியை பெறுவதற்கு பாகிஸ்தான் நிரந்தரத் தடைக்கு ஆளாகி கருப்புப் பட்டியலில் இடம் பெறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.