​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலிபோர்னியாவில் விமானம் விபத்து - 4 பேர் பலி

Published : Jan 24, 2020 8:59 AM

கலிபோர்னியாவில் விமானம் விபத்து - 4 பேர் பலி

Jan 24, 2020 8:59 AM

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

கலிபோர்னியாவில் உள்ள கரோனோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று 4 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் உயரே எழும்பும்போது ஓடுதளத்தின் கடைசி பகுதியில் உள்ள புதருக்குள் திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர். விமானம் புறப்பட்டு உயரே எழும்பியபோது, கம்பி வேலியின் மீது மோதியதால் தரையில் விழுந்திருப்பதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விபத்தை நேரில் பார்த்த பைலட் ஒருவரும் இதே தகவலை கூறியிருக்கிறார்.