​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிராவல் ஏஜென்டிடம் ரூ.100 கோடி இழப்பீடுகோரி வழக்கு: அசாருதீன்

Published : Jan 23, 2020 9:23 PM

டிராவல் ஏஜென்டிடம் ரூ.100 கோடி இழப்பீடுகோரி வழக்கு: அசாருதீன்

Jan 23, 2020 9:23 PM

மோசடி புகாரளித்த டிராவல் ஏஜென்ட்டிடம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடுக்க போவதாக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ததில் 21 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் போலீசிடம் டிராவல் ஏஜென்ட் முகம்மது சகாப் ((Mohammad Shahab)) புகார் அளித்திருந்தார்.

இதன்பேரில் 3 பேர் மீதும்  போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில்,  ட்விட்டர் பக்கத்தில்  அசாருதீன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடிப்படை முகாந்திரமில்லாதவை என்று மறுத்துள்ள அசாருதீன், டிராவல் ஏஜென்டுக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.