​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பு என தகவல்

Published : Jan 23, 2020 7:56 PM

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பு என தகவல்

Jan 23, 2020 7:56 PM

நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது இருபது ஓவர் போட்டியில், இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் ஆடும் பதினோரு பேரில் ஒருவராக சஞ்சு சாம்சன் இடம்பெறக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.