​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 நாள் சரிவுக்குப் பின் மீண்டது பங்குச்சந்தை வர்த்தகம்

Published : Jan 23, 2020 6:10 PM

3 நாள் சரிவுக்குப் பின் மீண்டது பங்குச்சந்தை வர்த்தகம்

Jan 23, 2020 6:10 PM

3 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 386 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் அதிகரித்து, 12 ஆயிரத்து 180 புள்ளிகளில் நிலை கொண்டது.

ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து, 71 ரூபாய் 33 காசுகளாக இருந்தது.