​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஞ்சிபுரம் பெண் கொலையில் காதலனை தேடி ஒடிசா விரைந்த தனிப்படை

Published : Jan 23, 2020 4:43 PM

காஞ்சிபுரம் பெண் கொலையில் காதலனை தேடி ஒடிசா விரைந்த தனிப்படை

Jan 23, 2020 4:43 PM

காஞ்சிபுரம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில், காதலனை பிடிக்க தனிப்படை போலீசார்  ஒடிசா விரைந்தனர்.

படப்பை அடுத்துள்ள ஆதனஞ்சேரி கிராமத்தில் தங்கி என்பீல்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஒடிசா இளம்பெண் ஒருவர், மர்ம நபர்களால், கூட்டுபாலியல் கொடுமைக்கு ஆளாகி, கழுத்தை நெரித்து படு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அப்பெண்ணின் காதலன் என்று கூறப்படும் ஒடிசா நபரான மணிஷ் மற்றும் கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

மணீஷ் தாம்பரத்தில் தங்கி பணி புரிந்து வந்த நிலையில், இளம்பெண் கொலை நடந்தது முதல் அவர் மாயமானதும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை தேடி ஒடிசா விரைந்துள்ளனர்.