​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குன்னூர் கிளப் ஜன்னலில் எட்டி பார்த்த சிறுத்தையால் அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்

Published : Jan 23, 2020 3:56 PM

குன்னூர் கிளப் ஜன்னலில் எட்டி பார்த்த சிறுத்தையால் அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்

Jan 23, 2020 3:56 PM

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள கிளப்பில் ஜன்னல் வழியே சிறுத்தை ஒன்று எட்டி பார்த்ததை கண்டு அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஊழியர்கள் அச்சத்தில் உறைந்தனர்.

image

குன்னூர் கிளப்பில் வழக்கம் போல நேற்று இரவு கிளப் உறுப்பினர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது ஜன்னலின் வெளிபக்கத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து ஜன்னலுக்கு சென்று பார்த்தபோது பெரிய சிறுத்தை ஒன்று உள்ளே நுழையும் திட்டத்துடன் எட்டி பார்த்துள்ளது. இதை கண்டு அச்சமடைந்த ஊழியர்கள், வெளியே வராமல் உள்ளேயே இருந்து கொண்டனர்.

image

பின்னர் நீண்டநேரம் சுற்றிவந்த சிறுத்தை, தனது முயற்சியை கைவிட்டுவிட்டு திரும்பிச் சென்றது. அந்த சிறுத்தை மீண்டும் திரும்பி வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.