​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பைனான்ஸ் நிறுவனத்தில் புகுந்து ஊழியர்களை அரிவாளால் மிரட்டும் நபர்

Published : Jan 23, 2020 3:08 PM

பைனான்ஸ் நிறுவனத்தில் புகுந்து ஊழியர்களை அரிவாளால் மிரட்டும் நபர்

Jan 23, 2020 3:08 PM

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்துக்குள் அரிவாளுடன் புகுந்த நபர் ஒருவர், ஊழியர்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்ட வீடியோ வலைதளங்களில் வைரலாகியது.

அரிவாளுடன் உள்ளே நுழைந்த நபர் தனது மனைவியிடம் ஆபாசமாக பேசியது யார் என்று மிரட்டினார். ஒருகட்டத்தில் அங்கு இருந்த ஊழியர் ஒருவரை வெட்ட முயற்சி செய்தார். அச்சமடைந்த ஊழியர்கள் அவரிடம் நைசாக பேச்சுக் கொடுத்து அலுவலகத்தை வெளிப்பக்கமாக பூட்டினர். சிறிது நேரத்துக்குப் பின் கதவை திறந்ததும் புலம்பியபடியே வெளியேறிவிட்டார்.

முன்னதாக அந்த நபரிடம் ஊழியர் ஒருவர் பேசியபோது, தன் மனைவிக்காக இங்கு இஎம்ஐ மூலம் செல்போன் வாங்கியதாகவும், அதற்கு பணம் கட்டச்சொல்லி, தொலைபேசியில் மனைவிடம் ஆபாசமாக பேசிய நபரை தேடிவந்ததாகவும் தெரிவித்துள்ளார். வலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த வீடியோவை பார்த்த போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்