​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்...

Published : Jan 23, 2020 1:49 PM

தஞ்சை பெரியக்கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்...

Jan 23, 2020 1:49 PM

தஞ்சை பெரியக்கோவில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு அஸ்திர மகா யாகம் மற்றும் அஷ்ட பந்தன மருந்து தயாரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழக்கு விழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு நடராஜர் சன்னதி முன்பு அஸ்திர மகா யாகம் நடைபெற்றது. இந்த யாகமானது குடமுழக்கு சமயத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காகவும், மக்கள் நலன் வேண்டியும் நடைபெற்றது.

அதைப்போல் அம்மன் சன்னதி முன்பு செம்பருத்தி பஞ்சு, குங்கிலியம் உள்ளிட்ட 7 வகையான மூலிகை பொருட்களை வெண்ணெயுடன் சேர்த்து மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்த மருந்தானது சுவாமி சிலைகளின் அடியில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக பலிபீடத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.