​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனது மகளுக்கு 2வது திருமணம் செய்து வைக்க முடிந்தது யாரால்? - ரஜினிக்கு அமைச்சர் கேள்வி

Published : Jan 23, 2020 1:45 PM



தனது மகளுக்கு 2வது திருமணம் செய்து வைக்க முடிந்தது யாரால்? - ரஜினிக்கு அமைச்சர் கேள்வி

Jan 23, 2020 1:45 PM

நடிகர் ரஜினிகாந்த், தனது இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிந்தது என்றால், அதற்கு தந்தை பெரியாரின் கொள்கைதான் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் அறிமுக பயிற்சி முகாம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 95 வயதிலும் சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர் தந்தை பெரியார் என்றார்.

மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது என்றும், எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது பற்றி பேசும் துரைமுருகனுக்கு, திமுக தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க மு.க.ஸ்டாலின் தயாரா என்றும் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.