​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.! துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்

Published : Jan 23, 2020 12:28 PM

முடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம்.! துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்

Jan 23, 2020 12:28 PM

முதலமைச்சர் பதவி குறித்து விமர்சித்த துரைமுருகன், முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

சென்னை மெரீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அதிமுகவில் அனைவருமே முதலமைச்சர்கள்தான் என்று கூறும் ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவாரா என துரைமுருகன் விமர்சித்தது பற்றி கேட்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒரு இடைவேளைதான் எனக் கூறிய அவர், அதிமுக தான் எப்போதும் ஹீரோ, 2021 ஆம் ஆண்டு கிளைமாக்ஸில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார். ஃபாஸ்டேகில் விதிமுறை மீறி கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

மேலும் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் உள்ள நாங்கள் யாரும் பெரிய மிட்டா மிராசுதாரர் கிடையாது. பெரிய பாரம்பரியத்தை பின்னணியாக கொண்டவர்கள் இல்லை. நாங்கள் கொடி வைத்த காரில் வலம் வர எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தான் காரணம். அதிமுகவில் கட்சிக்காக கடுமையாக உழைக்கும் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வர முடியும்.

ஆனால் திமுகவில் அப்படி நடக்குமா. இல்லை துரைமுருகன் தான் கட்சி தலைவராக ஆக முடியுமா. இல்லை ஸ்டாலின் தான் முதல்வர் பதவி துரைமுருகனுக்கு என்று அறிவிப்பாரா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.