​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

Published : Jan 23, 2020 12:00 PM

வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

Jan 23, 2020 12:00 PM

திருநெல்வேலி மாவட்டம் வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து, வரும் 27 ம் தேதி முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து 592 புள்ளி 91 ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்கு வரும் 27 ம் தேதி முதல், மார்ச் மாதம் 31 ம் தேதி வரை (31.3.2020) நாள் ஒன்றுக்கு
வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறக்க உத்தரவிட்டு இருப்பதாகவும், விவசாயப் பெருமக்கள் நீரை
சிக்கனமாக பயன்படுத்துமாறும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.