​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேஜஸ் விரைவு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதத்தால் பயணிகளுக்கு இழப்பீடு

Published : Jan 23, 2020 10:56 AM



தேஜஸ் விரைவு ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதத்தால் பயணிகளுக்கு இழப்பீடு

Jan 23, 2020 10:56 AM

அகமதாபாத் - மும்பை இடையிலான தேஜஸ் விரைவு ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால், பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி இழப்பீடு வழங்க இருக்கிறது.

புதன்கிழமை நண்பகலில் மும்பை வந்த தேஜஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. புறநகர் பகுதியான பாயந்தர் (Bhayander), தாகிசார் (Dahisar) ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதமானதாக கூறப்படுகிறது.

இதனால் அதில் பயணித்தவர்களுக்கு சுமார் 63 ஆயிரம் ரூபாய் அளவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி இழப்பீடு வழங்க இருக்கிறது. அகமதாபாத் - மும்பை இடையில் ஐ.ஆர்.சி.டி.சியால் இயக்கப்படும் இந்த ரயிலானது, தனியாரால் இயக்கப்படும் நாட்டின் 2வது ரயிலாகும்.

அந்நிறுவன விதிகளின் படி ரயில் ஒரு மணி நேரம் தாமதமானால் 100 ரூபாயும், 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானால் 250 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.