​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீ விபத்திலிருந்து 10 பேரைக் காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது

Published : Jan 23, 2020 8:40 AM

தீ விபத்திலிருந்து 10 பேரைக் காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது

Jan 23, 2020 8:40 AM

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேரைக் காப்பாற்றிய 12 வயது சிறுமிக்கு வீரதீர விருது வழங்கப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீப்பிடித்தது. இந்த விபத்தைக் கண்ட  ஜென் சதாவர்டே என்ற 12 வயது சிறுமி, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்புக்குள் சென்று சிறுமி 10 பேரைக் காப்பாற்றினார்.

அவர் படிக்கும் பள்ளியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பின் போது கற்றுக் கொண்ட பாடங்களை நினைவில் வைத்து தீயில் சிக்கியவர்களை காப்பாற்றியதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக 2019ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான விருது டெல்லியில் நடந்த விழாவில் ஜென் சதாவர்டேவுக்கு வழங்கப்பட்டது.