​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி சட்டமன்றத் தேர்தல் - 40 நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்குகிறது பாஜக

Published : Jan 23, 2020 7:48 AM

டெல்லி சட்டமன்றத் தேர்தல் - 40 நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்குகிறது பாஜக

Jan 23, 2020 7:48 AM

டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பறக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக டெல்லியின் 72 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கான வியூகம் அமைத்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முக்தார் அப்பாஸ் நக்வி , கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நடிகை ஹேமா மாலினி, நடிகர் சன்னி தியோல் உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களான ஜெய்ராம் தாக்கூர், மனோகர்லால் கத்தார், திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் டெல்லி சட்டமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.