​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
27-ம் தேதி முதல் தூங்கா நகரமாகும் மும்பை..!

Published : Jan 23, 2020 7:22 AM

27-ம் தேதி முதல் தூங்கா நகரமாகும் மும்பை..!

Jan 23, 2020 7:22 AM

மும்பையில் இரவிலும் வர்த்தகத்திற்கு அனுமதியளிக்கும் திட்டத்திற்கு மகாராஷ்ட்ரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 27-ம் தேதி முதல் மும்பை நகரில் 24 மணி நேரமும் மால்கள், கடைகள், திரையரங்குகள், உணவகங்கள் போன்றவற்றை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்கள், மதுக்கடைகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது. பார்கள் மற்றும் மது கடைகள் வழக்கம் போல அதிகாலை 1.30 மணிக்கு மூடப்படும்.

முதற்கட்டமாக குடியிருப்புகள் இல்லாத பகுதிகளில் மட்டும் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், இரவு முழுவதும் கடைகளை திறக்க வியாபாரிகள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அது அவரவர் சொந்த விருப்பம் என்றும் தெரிவித்தார்.

இரவு வர்த்தகத்தால் சுமார் 5 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 24 மணி நேரம் கடைகளை திறக்க விரும்புவோர் 3 ஷிப்ட்டுகளில் பணியாளர்களை வேலையில் பணியமர்த்தி கொள்ளலாம். ஆனால் தொழிலாளர் சட்டங்களை முறையாக பின்பற்றுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய சட்டத்தால் வேலை வாய்ப்புகள் பெருகும், வருவாய் அதிகரிக்கும் என மராட்டிய அரசு கூறியுள்ளது.