​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொது இடத்தில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் - தமிழக அரசு அரசாணை

Published : Jan 22, 2020 8:46 PM

பொது இடத்தில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் - தமிழக அரசு அரசாணை

Jan 22, 2020 8:46 PM

பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனி தனியே கட்டண முறையை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் குப்பையை கொட்டுவது, எச்சில் துப்புவது, குப்பையை எரித்தல், போன்றவைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும்,  தமிழகம் முழுவதும் சட்டத்தை விரிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.