சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள கடைகளுக்கு, குறைந்தபட்ச மாத வாடகையாக ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரையில் நடைபாதை கடைகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி தரப்பில் பிப்ரவரி முதல் வாரத்தில் தள்ளுவண்டி கடைகள் அமைக்க டெண்டர் விடப்பட உள்ளதாக கூறப்பட்டது.
கடைகளுக்கு மாத வாடகையாக 100 ரூபாய் வசூலிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்றைய சூழலில் 100 ரூபாய் மாத வாடகை என்பது ஏற்புடையதல்ல என்ற நீதிபதிகள், குறைந்த பட்ச மாத வாடகையாக ஐந்தாயிரம் ரூபாயாவது நிர்ணயிக்க உத்தரவிட்டனர். விரைவில் டெண்டரை இறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.