​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளம் காதலனை விரும்பிய பெண்... முதல் காதலன் படுகொலை

Published : Jan 22, 2020 8:03 PM

இளம் காதலனை விரும்பிய பெண்... முதல் காதலன் படுகொலை

Jan 22, 2020 8:03 PM

ஆரணி அருகே 37 வயது பெண்ணை இரு நபர்கள் விரும்பிய நிலையில், முதல் காதலன் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியதால், இரண்டாவது காதலனுடன் சேர்ந்து, முதல் காதலனை படுகொலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தன்னை விட வயது குறைந்த இளைஞர் மீதான முறையற்ற நட்பால் நடந்த படுகொலை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். 40 வயதாகும் இவர் கடந்த 18 ம் தேதி அதே பகுதியில் உள்ள ஏரி முட்புதரில் கழுத்து அறுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்ட சுரேஷ், ஆரணி சைதாப்பேட்டையைச் சேர்ந்த 37 வயது பெண்ணான கிருஷ்ணவேணியை 8 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணவேணியை தேடிய போது அவரும், அவருடன் நெருக்கமாக இருந்த அதே பகுதியைச்சேர்ந்த அஜீத் குமார் என்ற 21 வயது இளைஞரும் தலைமறைவானது தெரியவந்தது. இவர்கள் பற்றி விசாரித்தபோது, 8 ஆண்டுகள் காதலித்த கிருஷ்ணவேணியை சுரேஷ் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரான அஜித்குமார் என்பவருடன் கிருஷ்ணவேணிக்கு நட்பு ஏற்பட்ட தகவல் கிடைத்தது.

40 வயது காதலனை விட, 21 வயது இளைஞரின் நட்பால் கவரப்பட்டகிருஷ்ணவேணி,இருவரையும் கைவிடமுடியாமல், இருவருடனும் நெருக்கமாக இருந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுரேஷ் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கிருஷ்ணவேணிக்கு நெருக்கடி கொடுத்ததாக போது, மது போதைக்கு அடிமையானவர் என்று கூறி சுரேஷை திருமனம் செய்ய மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தங்களது நட்புக்கு குறுக்கே நிற்கும் சுரேஷை, அஜீத்குமார் மூலம் தீர்த்துக்கட்ட திட்டமிட்ட கிருஷ்ணவேணி, சுரேஷை வழக்கமாக சந்திக்கும் இடத்துக்கு வரச்சொல்லி, அங்கு அன்பாக பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த அஜித் குமார் உருட்டுக்கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் சுரேஷை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதில் அஜீத்குமார் கைது செய்யப்பட்டு வாக்கு மூலமாக தெரிவித்துள்ளதுடன், சம்பவ இடத்தில் கொலை தொடர்பாக போலீசார் முன் நடித்தும் காட்டியுள்ளார்.

இதையடுத்து அஜித்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்த போலீசார், கிருஷ்ணவேணியை தீவிரமாக தேடி வருகின்றனர். இது போன்ற முறையற்ற நட்பு கலாசார சீரழிவுக்கு வித்திடுவதுடன், அவர்களது எதிர்காலம் பாழாகி கேள்விக்குறியாகும் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது.