​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் மரணம்

Published : Jan 22, 2020 6:37 PM

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் மரணம்

Jan 22, 2020 6:37 PM

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர்.

அங்குள்ள  அவந்திப்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

அவர்களுக்கு பாதுகாப்பு படை, பதிலடி கொடுக்க, இருதரப்பிற்கும் மோதல் மூண்டது. இதில்   ராணுவ வீரர் ஒருவரும்,  காவலர் ஒருவரும் வீரமரணம் அடைந்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர், போலீசார் இணைந்து தக்க பதிலடி கொடுத்த தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.