​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரெயிலை கவிழ்க்க சதி..?

Published : Jan 22, 2020 6:32 PM

ரெயிலை கவிழ்க்க சதி..?

Jan 22, 2020 6:32 PM

திருப்பரங்குன்றத்தில் எக்ஸ்பிரஸ், ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் பெரிய சவுக்கு கட்டை கிடந்தது. அப்போது அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. 

தண்டவாளத்தில் சவுக்குகட்டை கிடந்ததை கண்ட டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி கட்டையை அகற்றி விட்டு சென்றார். இதுதொடர்பாக அவர் மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  ரெயிலை கவிழ்க்க சதி வேலையில் ஈடுபட்டுள்ளனரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.