​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி தேவஸ்தான அனைத்து கோவில்களிலும் கண்காணிப்பு கேமிரா

Published : Jan 22, 2020 6:27 PM

திருப்பதி தேவஸ்தான அனைத்து கோவில்களிலும் கண்காணிப்பு கேமிரா

Jan 22, 2020 6:27 PM

திருப்பதி தேவஸ்தான அனைத்துக் கோவில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் முதன்மை செயல் அலுவலர் கூறியுள்ளார்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் மூத்த அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால்,
திருமலையில் உள்ள அன்னதானக்கூடம், திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம் ஆகிய தங்கும் விடுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றார்.

பக்தர்கள் மரக்கன்றுகளை காணிக்கையாக வழங்கலாம் என்றும், அலிபிரி நடைபாதையில் கான்கிரீட் மேற்கூரை புதிதாக கட்டப்பட உள்ளது என்றும், நடைபாதையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார். அதே போல் தேவஸ்தான அனைத்துக் கோவில்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.