​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மாற்றி மாற்றி கருத்து கூறிய அமைச்சர்

Published : Jan 22, 2020 5:18 PM

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மாற்றி மாற்றி கருத்து கூறிய அமைச்சர்

Jan 22, 2020 5:18 PM

பாஜக கூட்டணியிலிருந்து பிரிவதற்கான நேரத்தை அதிமுக எதிர்பார்த்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்த அமைச்சர் பாஸ்கரன், தற்போது இருகட்சிகளிடையேயான கூட்டணியை பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், பாஜக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக எந்நேரத்திலும் தனியாக செல்லும் என்று கூறியிருந்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர்,  பாஜக, அதிமுக கூட்டணி உறுதியாக இருப்பதாகவும், அதை பிரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.