​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெட் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு..!

Published : Jan 22, 2020 5:13 PM

டெட் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு..!

Jan 22, 2020 5:13 PM

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான டெட் தகுதி தேர்வு ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 956 இடங்களுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே விண்ணப்பப் பதிவு நடைபெற்றுள்ள 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதிகளிலும் முறைகேடு புகாரால் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்து 60 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மே 2 மற்றும் 3-ம் தேதிகளிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.