​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமி குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆறுதல்

Published : Jan 22, 2020 4:22 PM

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமி குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆறுதல்

Jan 22, 2020 4:22 PM

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொங்கலாபுரத்தை சேர்ந்த அச்சிறுமி நேற்று முன்தினம் இயற்கை உபாதையை கழிப்பதற்காக முட்புதர்கள் நிறைந்தப் பகுதிக்கு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூவரிடமும், உள்ளூர் வாசிகள் மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிறுமியின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p