​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆயுள் தண்டனையை எதிர்த்து உதவிஆய்வாளர் மேல் முறையீடு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Published : Jan 22, 2020 3:44 PM

ஆயுள் தண்டனையை எதிர்த்து உதவிஆய்வாளர் மேல் முறையீடு - சி.பி.சி.ஐ.டி. அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Jan 22, 2020 3:44 PM

ராமநாதபுரம் அருகே காவல் நிலையத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி உதவி ஆய்வாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், சிபிசிஐடி காவல் அதிகாரி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் சையது முகமது என்பவர் இறந்த வழக்கில், உதவி ஆய்வாளர் காளிதாசுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அதில் முன்விரோதத்தில் சுடவில்லை என்றும் தற்காப்புக்காக சுட்டதாகவும், எனவே தண்டனையை ரத்து செய்யவேண்டும் என அவர் கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு இது குறித்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.