​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை வேலம்மாள் சிபிஎஸ்சி பள்ளியில் வருமான வரித்துறை சோதனை.. விடுதி மாணவர்கள் இரவோடு, இரவாக மாற்றம்

Published : Jan 22, 2020 2:55 PM

தஞ்சை வேலம்மாள் சிபிஎஸ்சி பள்ளியில் வருமான வரித்துறை சோதனை.. விடுதி மாணவர்கள் இரவோடு, இரவாக மாற்றம்

Jan 22, 2020 2:55 PM

தஞ்சையில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்சி பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவ, மாணவிகள் இரவோடு இரவாக மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் வேலம்மாள் குழுமத்திற்கு சொந்தமான சிபிஎஸ்சி பள்ளியில் உரிய அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த 9 மற்றும் 10ம் வகுப்பை சேர்ந்த 50 மாணவ, மாணவிகள் நேற்றிரவு பள்ளி வாகனம் மூலம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று விடுதி மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வராத நிலையில், அவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்ததாக கூறப்படுகிறது.