​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதித்து அறிக்கை அளிக்க உத்தரவு

Published : Jan 22, 2020 2:39 PM

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதித்து அறிக்கை அளிக்க உத்தரவு

Jan 22, 2020 2:39 PM

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

image

இதுதொடர்பான நீதிபதி கிருபாகரன் கடிதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இன்றைய விசாரணையின் போது, யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள  மாமல்லபுரத்தை அழகுபடுத்த மத்திய அரசு தான் நிதி ஒதுக்க வேண்டும் என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேவைப்படும் நிதி மற்றும் மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்து, தமிழக அரசின் பல்வேறு துறை செயலாளர்களும், மத்திய தொல்லியல் துறை இயக்குனரும் விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.