​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது மேலும் 4 புதிய வழக்குகள்

Published : Jan 22, 2020 10:38 AM

சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது மேலும் 4 புதிய வழக்குகள்

Jan 22, 2020 10:38 AM

பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது, மேலும் 4 புதிய வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளியான சோட்டா ராஜன், போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தபோது இந்தோனேசியாவில் வைத்து கைதுசெய்து, பின்னர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைத்துள்ளனர்.

சோட்டா ராஜன் மற்றும் சோட்டா ராஜனின் கூட்டாளிகள் மீது, மும்பை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் மேலும் 4 புதிய வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.