​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆண்டின் தொடக்கத்திலேயே முதல்முறையாக நிரம்பிய வீராணம் ஏரி

Published : Jan 22, 2020 10:26 AM

ஆண்டின் தொடக்கத்திலேயே முதல்முறையாக நிரம்பிய வீராணம் ஏரி

Jan 22, 2020 10:26 AM

வீராணம் ஏரி, இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள இந்த ஏரியால், இப்பகுதி விவசாயம் மற்றும் குடிநீருக்கும், சென்னை நகரின் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் ஏரி 4 முறை நிரம்பி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில், அணைக்கரை வடவாறு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 568 கனஅடி வீதம் காவிரி நீர் திறக்கப்படுவதால், நீர்மட்டம் இன்று 15.6 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக ஏரி நிரம்பியுள்ளது. தற்போது பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, சென்னை குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 74 கனஅடி வீதம் நீர் அனுப்பப்படுகிறது.