​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினி கருத்து: ஆதரவும் - எதிர்ப்பும்

Published : Jan 22, 2020 8:29 AM

ரஜினி கருத்து: ஆதரவும் - எதிர்ப்பும்

Jan 22, 2020 8:29 AM

தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971, ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின் போது ராமர், சீதையின் உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டுவரப்பட்டதாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ரஜினி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தான் உண்மையையே பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ரஜினி பேசியது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டார். தன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம் என்றும், பெரியாரின் கருத்துகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ரஜினிகாந்த் ஒரு நடிகர் என்றும் அவர் அரசியல்வாதி இல்லை என்று கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பெரியார் குறித்து பேசும் போது ரஜினிகாந்த் யோசித்து கருத்து கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாகரிக அரசியல் செய்ய விரும்பினால் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பாக, உண்மை தெரிந்த பிறகு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்பார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, பாஜக எம்.பி., சுப்பிரமணியன்சுவாமி ஆகியோர் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.