​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீடிக்கும் ஆலங்கட்டி மழையால் ஆஸ்திரேலியாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

Published : Jan 22, 2020 8:11 AM

நீடிக்கும் ஆலங்கட்டி மழையால் ஆஸ்திரேலியாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

Jan 22, 2020 8:11 AM

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில், ஆலங்கட்டி மழை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்துவரும் நிலையில் ஆலங்கட்டி மழையும் பெய்கிறது. கான்பெராவில் ஆலங்கட்டி மழையின்போது, பனிக்கட்டிகள் கூரை மற்றும் வாகனங்களில் விழுவதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், கான்பெராவில், ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என அச்சம் நிலவுகிறது.