​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரோவின் மருத்துவர்கள் குழுவிற்கு பிரான்சில் பயிற்சி அளிக்க திட்டம்

Published : Jan 21, 2020 9:16 PM

இஸ்ரோவின் மருத்துவர்கள் குழுவிற்கு பிரான்சில் பயிற்சி அளிக்க திட்டம்

Jan 21, 2020 9:16 PM

இஸ்ரோவின் ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களின் உடல்நலத்தை கண்காணிக்கும் மருத்துவர்களுக்கு, பிரான்சில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ககன்யான் திட்டத்தின் கீழ் 4 விண்வெளி வீரர்களுக்கு, ரஷ்யாவில் 11 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், விண்வெளி வீரர்களின் உடல்நலத்தை கண்காணிக்க, மருத்துவர்கள் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், அக்குழுவுக்கு பிரான்ஸ் நாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மைய தலைவர் இந்த வார இறுதியில், பெங்களூருக்கு வரும்போது, ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனச் சொல்லப்படுகிறது. ரஷ்ய பயிற்சிக்கு பின், 4 விண்வெளி வீரர்களையும், உடற்பரிசோதனைக்காக பிரான்ஸ் அழைத்துச் செல்ல இஸ்ரோ திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.