​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைவு

Published : Jan 21, 2020 8:14 PM

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைவு

Jan 21, 2020 8:14 PM

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.

நேற்று 3824 ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 9 ரூபாய் குறைந்து 3815 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று 30592 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 72 ரூபாய் குறைந்து 30,520 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த 18, 19 ஆம் தேதிகள் ஒரு சவரன் தங்கத்தின் விலை 30,624 ரூபாயாக இருந்தது. 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இதே போல நேற்று 50 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று 10 காசுகள் குறைந்து 50 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையானது.

நேற்று 50,700 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி,இன்று 100 ரூபாய் குறைந்து 50,600 ரூபாய்க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் டாலர் மீதான முதலீடு அதிகரித்து தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளதால் விலை குறைவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.