​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..!

Published : Jan 21, 2020 8:06 PM



பாங்காக் விமானத்தில் 4 குரங்குகள்..!

Jan 21, 2020 8:06 PM

பாங்காக்கில் இருந்து கடத்தி  வரப்பட்ட விலங்குகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

தாய்லாந்தில் இருந்து வரும் விமானத்தில் விலங்குகளை கடத்தி வருவதாக கிடைந்த தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சென்னையை சேர்ந்த சுரேஷ் வைத்திருந்த பெட்டியை பரிசோதித்த போது வனவிலங்குகள் இருப்பது தெரியவந்தது. 2 சிறிய ரக குரங்குகள், சிவப்பு நிற கைகளை கொண்ட 3 குட்டி குரங்குகள்,  அணில்கள், பல்லி வகையை சேர்ந்த 12 ஊர்வனவும் மீட்கப்பட்டன.

இந்திய காலநிலை அவற்றிற்கு ஒவ்வாது என்பதால் அவற்றை பாங்காக்கிற்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.