​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு..

Published : Jan 21, 2020 7:34 PM

பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு..

Jan 21, 2020 7:34 PM

பாகிஸ்தானில் கோதுமை மாவு பற்றாக்குறையால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

அந்நாட்டின் பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான டான் கூறியுள்ளது. மேலும் கோதுமைக்கு பதிலாக மக்கள் அரிசியை அதிக அளவில் பயன்படுத்துவதாகவும், கோதுமை மாவு பற்றாக்குறையால் பிரபல ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கோதுமை மாவு நெருக்கடிக்கு பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண அரசாங்கங்களை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் மத்திய அரசாங்கம் இந்த பிரச்சினையில் உதவி செய்யவில்லை என்று மாகாண அரசுகள் குற்றம் சாட்டி உள்ளன.

மார்ச் 20 ஆம் தேதிக்குள் சிந்திலும், ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் பஞ்சாபிலும் கோதுமை மாவு நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது என்று தேசிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.