​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் ?

Published : Jan 21, 2020 7:18 PM

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் ?

Jan 21, 2020 7:18 PM

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தலைமை ஆண் செவிலியர் ஒருவர் 400 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தலைமை ஆண் செவிலியரான சுந்தர்ராஜன் என்பவர், சம்பந்தப்பட்ட நபரிடம் 400 ரூபாய் கேட்கிறார். அந்த நபர் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் பெற எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்ப, மருத்துவருக்கு பணம் தர வேண்டும் என தலைமை செவிலியர் கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை மருத்துவர் தமிழரசன், எழுத்து பூர்வமாக புகார் அளிக்கப்பட்டால் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.