​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜன.26-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை கூட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

Published : Jan 21, 2020 6:55 PM

ஜன.26-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை கூட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

Jan 21, 2020 6:55 PM

இந்த ஆண்டிற்கான முதல் கிராம சபைக் கூட்டத்தை ஜனவரி 26ம் தேதி நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராம மக்கள் அறியும் வகையில் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

கூட்டம் நடைபெற்றதற்கான அறிக்கையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்திற்கு, பிப்ரவரி 5-ம் தேதிக்குள் தவறாமல் அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.