​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Published : Jan 21, 2020 6:37 PM

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Jan 21, 2020 6:37 PM

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றிக்கு எதிரான திருமாவளவன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

வாக்கு எண்ணிக்கையின் போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தொகுதி தேர்தல் அதிகாரி ஆஜராக முந்தைய விசாரணையின் போது நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளுடன் ஆஜரான தேர்தல் அதிகாரி, சிலவற்றில் ஓட்டுச் சீட்டும், பெரும்பாலானவற்றில் சான்றொப்பமும் இல்லை என விளக்கம் அளித்தார். இதையடுத்து தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.