​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
CAA பற்றி மம்தா, ராகுல், மாயாவதி விவாதிக்க தயாரா..? அமித் ஷா சவால்

Published : Jan 21, 2020 5:58 PM

CAA பற்றி மம்தா, ராகுல், மாயாவதி விவாதிக்க தயாரா..? அமித் ஷா சவால்

Jan 21, 2020 5:58 PM

எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

லக்னோவில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை தம்முடன் நேருக்கு நேராக விவாதிக்க தயாரா என்றும் அமித் ஷா சவால் விடுத்தார். காங்கிரஸ் நாட்டை பிளவுபடுத்தியதாக சாடிய அவர், குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

குடியுரிமை சட்டத்திருத்தம் திரும்பப் பெறப்பட மாட்டாது என எதிர்க்கட்சியினருக்கு திட்டவட்டமாக தெரிவித்த அமித் ஷா, இச்சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று விளக்கம் அளித்தார்.